நாக்கே கேள்
நல்லவரைஎல்லாம்
நரக வேதனைக்கு உள்ளாக்கிய
உந்தன் செயல்களுக்கு
ஓர்நாள் வருந்தத்தான் போகிறாய் ........
அவசரப்பட்டு அவமானத்தை தந்த
உன் ஆணவம்
ஓர்நாள் கொட்டுபட்டு
அடங்கத்தான் போகிறது ........
இனிமையாக பேசும்
இயல்பான குணத்தை இழந்த உனக்கு
பலமான காரணம் உண்டோ
பிறரை பழிப்பதற்கு .......
நன்றியை மறந்துவிட்டு
நீ ஆடும் நாடகத்திற்கு
நாள்ளதொரு வெகுமதி
நாளை காத்திருக்கிறது மறக்காதே ........
அன்பான வார்த்தைகளை
அவசரத்தால் மறந்துவிட்டு
அம்பாளே தாக்கியதை
நீ வேண்டுமானால் மறந்து விடலாம் ........
தீயால் பட்ட
காயங்கள் கூட ஆறிவிடும்
ஆனால் உன்னால் பட்ட காயங்கள்
உயிருள்ளவரை உள்ளத்தில் காயமாய் ......
நெடுங்காலம் வாழ்ந்திருந்தும்
நீ மாறும் வேளையில்
படுங்காயம் பட்ட
உள்ளங்கள் எத்தனையோ ........
நீ மாறிப்பேசும் வேளையில்
மரணம் கூட
பிறருக்கு சாத்தியமாகி இருக்கிறது
சாட்சியம் நீ சொன்னதால் ...........
எதிலும் எச்சரிக்கை தேவை
உண்மையாய் இரு
உலகம் உன்னை
ஓர்நாள் போற்றும் ......
கடமை உணர்ந்து
கட்டுபாட்டை உனக்கு நீயே போட்டுக்கொள்
வீணான விவாதங்களை
தவிர்த்து வாழ் .......
உலகத்தையே நீ ஒருத்தன்
கட்டுபடுத்திய வரலாறுகளை மறந்துவிட்டாயே
கருணையும் கலவரமும்
உன்னில்தானே இருக்கிறது .........
சாதியென்றும் மதமென்றும்
எல்லைஎன்றும் மொழியென்றும்
உன் உளறல்களால் உலகமே
அல்லாடுவதை என்று நிறுத்திக்கொள் .........
தர்மத்தையும் நீதியையும்
போதித்த உனக்கு
இன்று ஏன் தலைக்கனம்
பிடித்து போனது .......
உனது பணியை ஒழுங்காய் செய்
ஒருத்தரையும் இகழாதே
ஒருவரையும் வருத்தாதே
அன்றே நீ சிறந்தவன் ..........