புரியவில்லை புலம்புகிறேன்
என் கண்ணீர்
துடைக்க
கை குட்டை இல்லை
அவன் கால்கள்
நோகுமென்று
சிகப்பு கம்பளம்
அதில் நடக்கும்
அவனுக்கு தெரியம்
கம்பளம்
தமிழனின் ரத்தத்தில்
நனைத்தது என்று
நட்பு உறவு
நல்லது நாட்டுக்கு
மகனை
கொன்றவனுடன்
தங்கையை
மானபங்கம்
செய்தவன் உடன்
நல்லதா நாட்டுக்கு
வலியை உணர்வது
கடினம் தான்
மகனை இழந்த
தமிழ் தாயின்
வலியை உணர்வது
உங்களுக்கு கடினம் தான்
அம்மணமாய்
மனிதனை
அழிக்க எந்த
போர் முறை
சொல்லியது
மறதி
நோயும்
மறக்க செய்யவில்லை
அழிந்த என்
இனத்தின்
அழுகுரலை
பேசி பேசி
பேச மட்டும் தான்
தமிழனுக்கு
தெரியும் என்று
ஆக்கி விட்டோம்
ஒவ்வொரு நாளும்
நெருப்பை விழுங்கி
கொண்டு இருக்கிறோம்
எரிமலையாய்
வெடிக்க தருணத்தை
எதிர் பார்த்து
குறை சொல்ல
அரசியல் படிக்க வில்லை
நீங்கள் செய்வது சரி
என்றால்
பாதிக்க பட்ட
எங்களுக்கு பதில்
சொல்லுங்கள்
நீங்கள் அழைத்த
காரணம் என்ன?
நாங்கள் கொல்ல
துடிப்பவனை
நீ கோட்டைக்கு
அழைத்த காரணம் என்ன?
உறவை வளர்க்க
முயற்சி செய்
நாளை உன்
இனமும் அழியும்?
சொந்த நாட்டில்
இருந்து கொண்டே
அந்நியமாய்
வாழ்கிறோம்
தமிழன் சொல்லுக்கு
உங்கள் தலை கூட
அசையாது
ஆனால்
ஓரினம்
ஒன்றே குலம்
என்று
பொய் சொல்லி
வாழ்கிறீர்கள்!