முதல் முத்தம்
என் இதழில் நீ தந்த முத்தம்...
உன் இமைகள் அதிர்கின்ற சத்தம்...
வளைக்கரங்கள் தடுமாற-
வளையல்கள் பின்னிசைக்க-
இதழோடு இதழ் சேர்த்து
இனிப்பாக நீ இட்ட முத்தம்-
இதயத்தில் கொதிக்கின்ற வெப்பம்!
முந்தானை நழுவி விழ-
இளமேனி ஒடிந்து விழ-
என்னோடு உனைச் சேர்த்த
இதமான மெதுவான முத்தம்-
இதயத்தில் தேன் சுரந்து சொட்டும்!
எனக்காக நீ தந்த முத்தம்-
என் மனக்கோவிலின் வாசல் முற்றம்!
21.01.1995