ஏனோதானோ எதிரி இறைவனோ

மடையுடைத்து சீறியது
பாலாற்று படை -அதை
தடை விதித்து மாற்றுதிங்கே
கூவம் ஆற்று வாடை
குடி நீருக்கு பஞ்சம்
கழிவு நீரெங்கும் தஞ்சம்
பகலில் எரியும் விளக்கு
இரவு என்றால் அணையும்
வீணாக்க மாநகரம்
வீணாக மானிடரும்
சுழலும் பூமியில்
சூழும் கறையை
கழுவிட யாருமில்லை
வான் மழையும் கூட
கருமையாய் பொழிய
ஒதுங்குது கூரைக்குள்
தன் மேனி காத்திடவே
பொறுப்பற்ற செயல் செய்து
வெறுப்பது இறைவனை
யார் பிழைக்கு யார் பொறுப்பு

எழுதியவர் : கனகரத்தினம் (27-May-14, 1:53 am)
பார்வை : 312

மேலே