அண்ணன் குமரேசன்

இயல்தோறு முனையேத்து மிளையவ னென்னை
அயலென வெண்ணாக் குமரேசா - புயலென
உயர்ந்துநிற் பாய்புவி யாவையும் வென்றிடுவாய்
இயல்பாளு மீடிலாத்திறன் கொண்டு.

கடினமென் றேதுமில்லை நீயிட்ட பாதையிலே
அடிகண்டு வந்திடுந் தேசமெலாம் - பிடியெனப்
பிடித்திட நாளுமுன் வாழ்வியல் சேதியைத்
துடியாய்த் துடிக்கு முலகு.

ஓங்கியோ ரதிர்மொழிநீ யுரைத்ததில் லையுன்பால்
ஓங்குதுய ரென்று முறைவதில்லை - பாங்குடன்
வலிதாங்குந் தாயானாய் நீயேதுஞ் செய்யாமலே
கிலிதாங்கு மிழியோர் படை.

கையூட் டழித்திடுங் கருவறை புகுந்தென
நீயூட்டிய புரட்சிப் பாலுண்டு - தீயூறு
மிதயமுடன் வாழ்வேன் நானெங்கும் தானென்ற
பதமென்றும் பகராதென் பிறப்பு.

- இராசகோபால் சுப்புலட்சுமி


(நான் குமரேசன் தம்பி கவியிலும்; புவியிலும்)

இது பயிற்சிக் கவிதை....
சிற்பமாகக் காத்திருக்கிறது இந்தக் கல்.
சிற்பிகள் உளிதொடுங்களேன்.

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (27-May-14, 11:15 am)
பார்வை : 524

மேலே