நோக்கியா சின்ன பின் சார்ஜெர்
பொறியியல் படிப்பு முடித்து
'ஜாவா' வில் கோர்ஸ் படிக்கவும்
வேலை ஒன்றை தேடிக்கொள்ளவும்
ஹைதராபாத் சென்றவன் வம்சி,
'கடலோர' ஆந்திராவிலிருந்து !
அதற்காகவே விரட்டி அடிக்கப்படுவோம் என்ற பயத்தால்,
சென்னையில் எட்டு முன்பின் தெரியாத இளைஞர்கள்
இருக்கும் எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான் சோகத்தோடு
உடன் வந்து சேர்ந்தது எங்களில் நான்கு பேருக்கும் சேர்த்து உள்ள
ஒரே ஒரு நோக்கியா சின்ன பின் சார்ஜெர்
தெலுங்கான 'பரிசு' !