என்னை பிடித்திருக்கிறாய்
அதுவரை காற்று என்னிடம்
பேசியதில்லை
அன்று அனுமதி கேட்டது
சற்று இடைவெளி கிடைக்குமா
ஒட்டிய தேகத்தின்
இடையில் செல்ல என
மழைத் துளி என்னை
அதுவரை
கண்டுக்கொண்டது இல்லை
அன்று பாராட்டியது என் கைபிடித்து,
நீ நனைந்து கொண்டிருக்கையில்
நான் கொடுத்து வைத்தவன்
என்று. .........
நிலவு அதுவரை என்னை
ஏறிட்டு நோக்கியதில்லை
அன்று கெஞ்சியது
இவளை எப்படியாவது மறைத்து வை
இந்த பெண்நிலவு என்னில்
பொறாமை வரவைக்கிறது
என்று.........
இனியவளே இயற்கை யே
உன்னைக் காணத் தவமிருக்கிறது
நீ எப்படி என்னை
கரம்ப் பிடித்து அமர்ந்திருகிறாய்......?