ஈழன்
அஞ்சலி. ....
நினைவு கூறுதல்....
அழிகையில்
, அழுகையில் ......
வேடிக்கை பார்த்து. .....
குள்ள நரி போல் குழி வெட்டி........ குண்டுகள் சிதறிய போதும்......
கண்டும் காணாத
உங்கள் அஞ்சலி. ........
கிடப்பில் தூக்கி போடுங்கள். ...... ஓரமாய் இருந்து
ஒய்யாரமாய் பார்த்து ......
தான் உண்டு
தன் நாடு உண்டு
என இருந்த
உன் அஞ்சலி எனக்கெதற்கு........
ஆறுதல் தேடுகிறீரா .......
கவியில்
ஆற்று வெள்ளம் போல்
ஊற்றெடுக்கும்
வீரங்கள்.......
கால்வாய்களாய்
போனதோ
காப்பாற்ற கதறுகையில்.......
ம் இனம் மொழி
என இங்கு
இனி எட்டியும் பார்காதீர்........
இனி பார்த்து
மட்டும் என்ன
ஆக போகிறது.......
நீங்கள் துண்டை
வைத்து வரதாத
கண்ணீரை துடைத்தபடி ........ அங்கேயே இருங்கள்.........
நானும்
இன்றோ நாளையோ.......
செத்து
மடிந்த
பின்
இரங்கல்
கூட்டம்
இட்டு
கதறுங்கள்.......
இனம்
காக்க
முடியா
கோழைகளே
இரங்கல்
செய்து
பாசாங்கு
காட்டாதீர்.......
வீரத்தமிழன்
மரத்தமிழன்
என்று. ......
நீங்கள்
மரத்தமிழர்
அல்ல
மரத்துப்போன
மறுத்துப்போன
தமிழர்கள். .......
- ஈழன்