சொல்லிமுடியாத எண்ணங்கள்

.."" சொல்லிமுடியாத எண்ணங்கள் ""...

உள்ள(த்)தை உருக்கியே மையாக்கி
உயிரில் கரைத்து உண்மை சொல்ல
கவிதை வடிவிலே கண்ணீர் சிந்திட
என் எண்ணங்களை எழுத்துக்களாக்கி
வண்ணம்கள் பூசியே வாழ்க்கையினை
வார்த்தைகளுக்குள்ளே அடைத்திடவே
ஆயிரமாயிரம் முறைகள் எத்தனித்தும்
அது அணையுடைந்த வெள்ளம்போல்
ஓர் எல்லைக்குள் நிற்கவே மறுக்கிறது
வரைந்துவிட்ட ஓவியம் முழுமைபெற
பொலிவிழந்து மங்கலாகவே தெரிகிறது
ஒன்றொன்றாய் பிரித்தேதான் பார்க்கவே
அழுதால் கவலை சிரித்தால் மகிழ்ச்சி
மெளனமென்பது சிலநேரத்து நிம்மதியே
ஒவ்வொரு ருசியிலும் பலபல கதைகள்
இன்று வரையிலும் எழுதிவந்தும் ஆரம்ப
எல்லையின் எல்லைகூட கடக்கவில்லை
இறுதியிலொன்று மிகதெளிவாய் புரிந்தது
எண்ணங்கள் ஒருபோதும் எழுத்துகளால்
நிறைவுபெற்று முழுமைபெற முடியாது

எண்ணத்தை எழுத்தா உங்களோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (29-May-14, 11:00 am)
பார்வை : 56

மேலே