பெண்

போடி போடி பொசக்கெட்டவளே
நீ பெத்த மூனும் பொண்ணாகி
போச்சி........
என் "மகன் ஆசை"
எல்லாம் வீணாகி
போச்சி.........
இனி எவன் காலப்பிடிப்பன்
இதுங்கள கரைசேத்து
முடிப்பன்.......
கொல்லி வைக்க ஆணு ஒன்னு
பெத்து வைக்க வக்கில்ல
வேற கிளி நான் பாத்தா
உனக்கு நோகுதுவோ
உள்ளுக்குள்ள......?
கஞ்சி வடிச்சி போடுன்னா
மூஞ்ச தூக்கி நிக்குறியே
பொசகெட்ட நாதி நீ
கோபத்த
என் கிட்ட காட்டுறியோ.....?
மூனு புள்ள பெத்தவிட்டேன்
பொண்ணாதான் போயிடிச்சி
நான் பெத்த புள்ளையினு
வாய்க்கூசா சொல்லுறியே
நான் போட்ட பாயினுல
நீ தூங்காமா போனுதியா....?
இல்லை வேறொருத்தன்
இங்க வந்து
என் தூக்கம் கலைச்சதாயா...?
ஆண் பெத்தா உன்புள்ள
பெண்ணானா என் புள்ள
யாரு சொல்லி வைச்சதுன்னு
நீ போற அவ பின்னால.......
ஆணு ஒன்னு வேணுமுனா
கூட்டி வாயா ஆம்பலைய
யார் மேல குறையின்னு
அப்ப தெரியும் தன்னால......
அடுப்படியே கதியின்னு
இருப்பன்னு நிச்சீயா
நாலு வீட்டு பாத்திரத்த
கழுவி விட்டு நான் இருப்பன்
மூனு புள்ள கரைசேக்க
கல்லுடச்ச மண் சுமப்பேன்.....
எவக்கூட வேணாலும்
நீ போயி இருந்துகய்யா
இங்க வந்து சோறு கேட்டா
உன் மானம் போகுமயா.....
பொசக்கெட்ட ஆம்பளையா
நீ வந்து வாச்சதுக்கு
நான் என்ன பண்ணுறது
உன் வேலைய தான் பாத்துக்கயா.......