ஆசை

மஞ்ச சேலை கட்டிக்கிட்டு
மனசுல என்ன வச்சிக்கிட்டு
கொஞ்சி கொஞ்சி போறவளே
நில்லு புள்ள நான் வாரேன்........

சாயங்காலம் ஆகிடிச்சு
களைச்சி போயி வந்திருக்கன்
உன் மடி மேல சாஞ்சிகிட்டா
போதை ஏறி போகும் புள்ள.....

கொஞ்சிகிட்டே போனவளே
என்ன கெஞ்ச வைச்சா
நியாயமில்ல.......
பஞ்சி பஞ்சா போகுதடி
என் நெஞ்சிக் பூரா
நோகுதடி........

வாய்க்காலு பக்கத்துல
யாரும் இல்ல
கொஞ்ச நீ வாடி.......

நீ கெஞ்சி கெஞ்சி கேட்டாலும்
நான் வரமாட்டன் நீ
போயா.......
மாலை ஒன்னு போட்டபின்னே
இந்தகாளைக்கு தான்
நான் இப்ப வேணாயா.......

ஆசை எல்லாம் பூட்டி வையி
காசை கொஞ்சம் சேத்து வையி
தாலி ஒன்ன வாங்கிக்கிட்டு
என் அப்பன் கிட்ட கேட்டுபுட்டு
காத்திருக்கும் தோள் மேல
சீக்கிரம் தங்கதாலி கட்டு.........

அப்புறம்

உன் பூட்டி வைச்ச ஆசைக்கெல்லாம்
சாவி கொண்டு வாரேய்யா.........

எழுதியவர் : கவியரசன் (30-May-14, 1:01 pm)
Tanglish : aasai
பார்வை : 95

மேலே