கொஞ்சம் அழகுக்கே

கொஞ்சம் அழகுக்கே முகக்கண்ணாடிய உடைத்தேன் !
கொஞ்சம் அதிகாரத்துக்கே மக்களையே
முறைத்தேன் !
கொஞ்சம் அறிவுக்கே ஆடிக்கொண்டேன் !
கொஞ்சம் மதிப்புக்கே மயங்கிக்கொண்டேன் !
இப்படி காலமுழுக்க ------
கடமை கல்லறையில் பெருந்தன்மை
உயிரை மடித்துக் கொண்டேன் !
வாழ்க்கை சல்லடையில் தற்பெருமை
நீரை வடித்துக் கொண்டேன் !