இடமில்லா தகவல்கள்

அமீபாவுக்குள்ளும்
வாரணங்களாய்
தோரணங்காட்டும்
தகவல்கள்

உன் சட்டியளவே
வடிவம் பெரும்
தண்ணீராகிப் போன
தகவல்கள்

விரலேறி
விழியேறி
வேளைதின்னும்
ஆளைத்தின்னும்
தகவல்கள்

மூளைதொற்றி
முடங்கவிடாது
உறங்கவிடாது
உழற்றும்
தகவல்கள்

இசைவின்றி
பசையின்றி
பிசைந்து
பிதற்றும்
தகவல்கள்

மறதியை ஊக்கிடும்
ஆனாலும் ஊறிடும்
சிலநேரம் உளரிடும்
தகவல்கள்

மங்காதுரைக்கும்
மாற்றம் பிறக்க
மாறியே பறக்கும்
தகவல்கள்

நேற்றை நிரப்பிய
இன்றினில்
நிறமில்லா
தகவல்கள்

நாளை நிரப்பிய
இன்றினில்
நிசமறியா
தகவல்கள்

இன்றை நிரப்ப
இன்றினில்
இடமில்லா
தகவல்கள்

எழுதியவர் : சர்நா (30-May-14, 12:08 pm)
பார்வை : 85

மேலே