சித்திரை பெண்ணே

எந்தன் சித்திரை பெண்ணே, என்னை
நித்திரையில் மட்டும் வாழவைத்தாய்
நித்தம் உன்னை நினைத்து
நினைப்புடனே வாழ்ந்து வந்தேன்

தினமும் பூத்து குலுங்கும் நம் காதல்
மனம் என்னும் தோட்டத்திலே
யார் கண் பட்டதோ தெரியவில்லை
அக்னி வெயில் வந்து எரித்ததே

உன்னை மட்டும் ஒரு பறவை
நீர் ஊற்றி வளர்த்ததே
உந்தன் வரவுகாக தனந்தனியே காத்திருந்து
நான் மட்டும் வெயிலில் கருகி
எந்தன் உயிர் நீத்தேனடி

எழுதியவர் : ஆரன் (30-May-14, 7:40 pm)
சேர்த்தது : Aaran
Tanglish : sithirai penne
பார்வை : 189

மேலே