இம்மை மயக்கம்

மன்னாதி மன்னர்களும்
மாண்புமிகு கலீபாக்களும்
சீரிய நல் உலமாக்களும்
சிறப்புயர் நல்லோர்களும்
மண்ணோடு மண்ணாய்
மாண்டு மறைந்தனரே
நிலையற்ற வாழ்க்கை
இதுவெனத் தெரிந்தும்
இம்மை மயக்கத்தில்
இயந்திரமாய் மானிடனே
எத்தனை காலம் வாழ்ந்திடுவாய்?
ஏழு தலைமுறையினர் உனக்கு பின்
எழில் மாளிகையில் இருந்து உண்பதற்கோ திரவியங்கள் பல திரட்டுகின்றாய் நாளெல்லாம்
ஈட்டியதை புனிதமாக்க
எளியவர்க்கு ஒரு பகுதியை
ஈயாமல் கூட சேமிக்கின்றாய்.....
உடலை விட்டு உன்னுயிர் பிரிந்தபின்
உறங்கிப் போவதோ
ஆறடி மண்ணறையில் தானே?
வண்ணப்பட்டு என
வகை வகையாய் தைத்துடுத்தி
பொன்னும் வைரமுமாய்
உன் பொன் மேனிக்கு
பூட்டி மகிழும் உனக்கு
குளிர் நடுங்கி நிற்கும் ஏழைகளுக்கு கந்தலுடையைக் கூட
கொடுக்க மனமில்லை
உடலைவிட்டு உன்னுயிர் பிரிந்தபின்
அம்மண மேனிக்கு அணிவிக்கப் போவதோ வெள்ளை கபன் மட்டுமே!
உடலை விட்டு உன்னுயிர் பிரிந்தபின் உன்னோடு கும்பலாக வந்து
தனிமையைத் துணையாக்கி தந்து
திரும்பிடுவர் மறுகணமே உன் உறவினர்கள் அப்படியிருக்க அவனை உவந்து போற்றி தொழுது வணங்காமல்
இறைமறை போதனைகளையும் பேணாமல்
நாம் எனது எனும்
தந்நலத்து மாயவிளக்கில்
விவேகமற்ற வீட்டில் பூச்சியாய்
வலியப் போய் விழுந்து மடியும்
வக்கிரப் புத்தியுடைய
மானிடனே ஒரே ஒரு கணமேனும்
சிந்தித்துப் பார்....
தெளிந்து விடும் இம்மை மயக்கம்.....
தெரிந்து விடும் மறுமை நோக்கம்.....

எழுதியவர் : சைனுல் (30-May-14, 5:57 pm)
Tanglish : IMMAI mayakkam
பார்வை : 120

மேலே