என் காதல் ஜுரத்திற்கு உன் சம்மத மாத்திரை
என் கடிதத்தை
நீ
கசக்கிப் போடு
அல்லது
கிழித்து வீசு
அல்லது
தீயிட்டு எரி !
ஆனால்
அவற்றைச் செய்யுமுன்
ஒருமுறை படித்துவிடு !
நீ
படிக்கும்
அந்த கணத்திலாவது
ஒன்றாக உன்னோடு
வாழ்ந்து விடுகிறேனே !
==============================================
என்
காதல் ஜுரத்திற்கு
உன்
சம்மத மாத்திரை
தருவாயா ?
===============================================
என் மீதான
உன் சிரிப்பு
புன்னகையாய் மாறும்போது
என் மீதான
உன் நட்பும்
காதலாய்
மாறக்கூடும் என
நம்புகிறேன் !
==============================================
எந்தப் பெண்ணும்
காதலிக்கவில்லையே என
வருந்திக்கொண்டிருந்தேன் !
உன்னைப் பார்த்தபிறகு
அந்தப் பெண்களுக்கு
நன்றி சொன்னேன் !
=============================================
நீ
உறங்குவதற்கு
என்னிடம்
தங்கக்கட்டில் இல்லை !
பட்டுமெத்தை இல்லை !
மயிற்தோகை விசிறி இல்லை !
நீ
உறங்குவதற்கு
என்னிடம்
எதுவுமே இல்லை !
என்
மடியைத் தவிர !
==============================================
தன்னில் விழுந்த
பிம்பத்தை
கண்ணாடியால்
காட்டத்தான்
முடிகிறது !
சொல்ல முடிவதில்லை !
அதே போல,
உன்மீதான காதலை
என்னால்
காட்டத்தான் முடிகிறது !
சொல்ல முடிவதில்லை !
==============================================
காதல்பிச்சை
நீ போட்டால்
என்
இதயத் திருவோடு
அட்சய பாத்திரமாகும் !
==============================================
என்
காதல் கோரிக்கைக்கு
உன் கண்கள்
முறைத்தாலும்
உதடுகள்
மௌனம் சாதிப்பதேன் ?
==============================================
என்
அத்தனை
காத்திருத்தல்களும்
தவமாய் மாற
ஒரேயொரு
வரம் தா !
- குருச்சந்திரன்