வங்கியின் சேவை
படித்தேன் பகிர்கின்றேன் ...........
SBI வங்கியின் அடாவடி ஐடியா!
----------------------------------------------
அது என்னவோ நான் பாட்டுக்கு செவனேனு ஓரஞ்சாரமாப் போலாம்னு பார்த்தா.. பஞ்சாயத்துகள் `ரா..ரா.. சரசுக்கு.. ரா.. ரா..’னு கூப்பிடுது. போற இடமெல்லாம் கேள்வி கேட்பதால் சண்டை தான்.
நேத்து கெல்லீஸில் இருக்கும் SBI வங்கி கிளைக்கு நண்பர் ஒருவருக்கு பணம் போட சென்றிருந்தேன். மேனேஜர் பெயர் கிருத்திகா.
உள்ளே நுழைந்ததும், நிமிர்ந்து பார்த்த ஒரு மேடம் ``என்னா”னு கண்ணை உருட்டிக்கிட்டே கேட்டார்.
``பணம் போடணும் மேடம்..”
``அக்கவுண்ட் இருக்கா.. ”
``இருக்கு.. ஆனா வேற பிராஞ்ச்..”
``அப்போ இங்க பணம் போட முடியாது.. உங்க பிராஞ்ச்ல தான் போட முடியும்..”
``ஏன் மேடம்.. எல்லா பிராஞ்லயும் போடாலாமே..”
``போட முடியாது சார்..”
``அதான் ஏன் போட முடியாதுனு கேட்கிறேன் மேடம்..”
``அது அப்படித்தான்..”
இப்போ எனக்கு மணடை சூடாகிடுச்சு..
``அது அப்படித்தானா.. பணம் கட்டக்கூடாதுனு ஏதேனும் ரூல்ஸ் இருக்கா மேடம்..”
ரூல்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் மேடம் லைட்டா ஜெர்க்காகி ``ரூல்ஸா.. ” என்றபடியே இப்போது நிமிர்ந்து பார்த்தார்.
``ஆமா மேடம்.. ரூல்ஸ் இருக்கா.. ரூல்ஸ் இருந்தா சொல்லுங்க.. நான் பத்திரிகைக்காரன்.. செய்திக்கு பயன்படும்..” என்று கோபத்தில் கேட்டேன்.
``ஐயோ.. சார்.. நீங்க என்ன.. ரூல்ஸெல்லாம் கேட்கிறீங்க.. நீங்க பணம் கட்டிட்டு போங்க சார்..”
``நான் பணம் கட்டுறேன்.. கட்டாம போறேன்.. என்னை விடுங்க மேடம்.. ஸ்டேட் பேங்க்ல அக்கவுண்டே இல்லாத ஒருத்தர் அவசரத்துக்கு தனக்கு தெரிஞ்சவுங்களுக்கு பணம் போடணும்னா அனுமதி உண்டா.. இல்லையா.. அதை சொல்லுங்க.. ” என்றேன் கோபம் குறையாமல்.
மேடம் அமைதியாகிட்டாங்க.
பணப்பரிமாற்றம் அக்கவுண்ட் வழியாக நடக்கணும்ங்கிறதுக்காக இப்படி பண்றாங்களாம். வெளி ஆட்கள் பணம் போடணும்னா ஒரு விண்ணப்பம் பூர்த்தி செஞ்சு, அடையாள அட்டை ஜெராக்ஸ் கொடுத்து போட்டோ ஒட்டி கார்டு வாக்கிக்கணுமாம்..
எதுக்கு.. அவசரத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம்னு பணம் போடுறதுக்கு..
என்னையா முட்டாள் தனமா இருக்கு.. இந்த துக்ளக் ஐடியா கொடுத்த ஐடியா மணி யாரு..
இந்த நாட்ல எல்லாப்பயலுவளுக்கும் பேங்க் அக்கவுண்ட் இருக்கா என்ன.. அப்படியே இருந்தாலும் எல்லா வங்கியிலும் அக்கவுண்ட் வைக்க முடியுமா.. இவங்க வேலை செய்யாம இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் திட்டம் போடுறாங்க பாருங்க..
அவசரத்துக்கு ஒருவருக்கு பணம் போடணுங்கிறதுக்காக இவங்க வங்கில கணக்கு திறக்க முடியுமா..
கோடிக்கோடியா கருப்பு பணம் வச்சுக்கிட்டு டிரான்ஸாக்ஷன் பண்றவங்கக்கூட கூட்டுக்களவாணியா இருந்து கண்டுக்காம விட்டுருங்க..
அயிரம் இரண்டாயிரம்னு அவசரத்துக்கு பணம் போட வர்றவன்கிட்ட ரூல்ஸ் பேசுங்க..
வங்கிகளுடனான என் அனுபவத்தில் சொல்கிறேன்.. SBI மற்றும் Indian Bank ஊழியர்களைப்போல் தெனாவட்டான ஊழியர்களை பார்த்ததில்லை.. (இந்த வங்கிகளில் பணிபுரியும் நண்பர்கள் வருத்தப்படாதீங்க.. விதிவிலக்காக ஒரு சில ஊழியர்கள் இருக்கலாம்..)
இப்படி தெனாவட்டா மக்களை டீல் பண்ணிட்டே இருங்க.. அப்புறம் தனியார்மயம்.. தாராளமயம்னு சங்கத்துக்கொடியை தூக்கிட்டு கிளம்புங்க.. உருப்பட்டுரும்..
அப்புறம் ஏன் தனியார் மற்றும் வெளிநாட்டு பேங்க்காரங்க செழிப்பாக மாட்டாங்க..
===========================================
குறிப்பு :
மக்கள் சேவையில் ஈடுபடும் ஊழியர்கள்
அனைவரும் மக்கள் சேவையை முன் நிறுத்தி
மாற்றங்களை ஏற்படுத்தி சமுதாயத்தை நிலை நிறுத்த வேண்டும். = கிருபகணேஷ்
============================================