மருவாகினாலே போதும்
நின் திரு உரு அதை
தினம்தினமும் என
அனுதினமும் ஆற அமர
அருகாமையினில் அமர்ந்தபடி
பெருகிக்கிடக்கும் அழகத்தனையும்
அள்ளி அள்ளி பருகிக்களித்திட
நான் கருவாகி உருவாகி
உயர் உயிராகிட எண்ணமில்லை
உன் ஒய்யார கழுத்தின்
"மரு"வாகினாலே போதும் !!