உனது நெருக்கம்

நான் பார்த்திடும்
காட்சி உண்மைதானா.........!
பழகினோம்
காதலெனும் கவிதையை
எழுதினோம் ஒன்றாக............!
நம்மை பார்த்திடும்
காதல் இல்லா
உள்ளங்கள்
பொறாமை கொண்டது
பலநேரம் வெறுப்பும்
கொண்டது............!
உனது நெருக்கம்
எனை மறக்கச்செய்தது
மதி மயங்கவும்
செய்தது.............!
யார் கண்கள்
பட்டதோ தெரியவில்லை
புரியவில்லை
உனது பிரிவை
நினைக்கிறேன் எனது
உள்ளத்தை
சபிக்கிறேன்
நமது பிரிவாலே........!
ஊடலில் கூட
ஒருவித வலிகள்
இருக்கத்தான்
செய்கிறது அன்பே.........!
உணருகிறேன்
உலர்த்துகிறேன்
உன்னை மீண்டும்
காண்பதற்கு..........!