வருகையும் புறப்பாடும்
வருகையின் சந்தோசம்
மலர்ந்த வசந்தத்தை காண
புறப்பாடின் வேதனை பிரியும்
உறவுகளை விட்டு
தூர தேச நாடுகளின் வாழும்
நம் இதயங்கள் மனதில்
பல வருடங்கள் காண வேண்டும்
வசந்தத்தை சொந்த மண்ணில்
பிரிந்த உறவுகள் பிரியாத நினைவுகள்
கடந்த காலம் தந்த இயலாமை
காசு தேடி காணாத தூரம் சென்று
வேர்வை கூட முதுமை காணும்
இது அவர்களின் கனவல்ல வரும்
லட்சியம் நிறைவேற உழைப்பு
சொந்த வீடு தங்கையின் திருமணம்
சகோதரனின் மேல் படிப்பு
இன்னும் ஏத்தனையோ சுமைகளுடன்
பாலை சுடு மணலில் படும் வேதனை
இந்த வருகையின் சந்தோசம் ! நிழலாக
அந்த புறப்பாடின் வேதனை ! தொடர்ந்து
குறிப்பு:
தூர தேச நாடுகளில் வாழும் அன்பர்களுக்கு
இது சமர்ப்பணம் ............
ஸ்ரீவை.காதர்.