அருவி

உன் பிறப்பை பார்த்தவர்
பாரில் இல்லை
உன் அழகை வெறுத்தவர்
எவரும் இல்லை

நீ விழுகின்ற அழகே
மனக்கவலை, குறையும்
மருத்துவமே

தாய்மை போல உன்னில்
பல உயிர்களின் வாழ்க்கை
உன் கரமே

மழலை போல உன் வெள்ளம்
யாரிடத்த்தும் பகைமை இல்லா
ஏற்ற தாழ்வு காணாது
சாதி மதம் கேட்காது
எல்லா அறிவு உயிர்களையும்
சமநிலை பார்க்கும்
அருவியே நண்பனே

வையம் சுழல நீயும்
வந்தாய் ஒரு வரமாய்
கொடை அன்னை நீயே

எழுதியவர் : sivani (1-Jun-14, 3:40 pm)
Tanglish : aruvi
பார்வை : 195

மேலே