ஊழ்

வெண் மதி கூன் விழுக
தேய் பிறை என்றால்,
மனிதர் மதி கூன்விழுக
விதியென்றார் வீணர்
இல்லாத ஊழ் அதற்குக்
கூன் மனிதர் கூழ் வார்ப்பார்.
தேயும் நிலா இயற்கை நியதி.
கூன் விதிதான் ஊழான மடமை.
வளரும் மதி நிலவாய்
வளர்ப்பதன்றோ
அறிவுடைமை..!!