என்ன கொடும சார்

ஆப்பிரிக்கர்களை சிவப்பாக்காதவர்கள்
ஆஸ்திரிலேயர்களின் கூந்தலை கருமையாக்காதவர்கள்
இன்னும் எத்தனையோ
அழகு சாதன நிறுவனங்கள்
படையெடுக்கின்றன
நம் மக்களை நோக்கி
மற்ற நாட்டவருக்கெல்லாம்
தெளிவாய் தெரியும்
அழகு என்பது
இயற்க்கையாய் உள்ள விஷயம் என்று
பாவம் எப்பொழுதுமே
ஏமாறுபவர்கள்
எம் குல பெண்கள் மட்டுமே

தங்களை அறிவாளிகளாய்
காட்டி கொள்வதை விட
அழகாய் காட்டி கொள்ளவே
ஆசை நமக்கு
நம்மை முட்டாளாய் ஆக்கியதில் அவ்வளவு
இலாபம் நிறுவனத்திற்கு

எழுதியவர் : ந.சத்யா (2-Jun-14, 5:18 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : yenna koduma saar
பார்வை : 81

மேலே