வானம் அழுகிறது
பிள்ளையின் மடியில்
வறட்சியைக் கண்டு
வானமும் அழுதது
கண்ணீர் விட்டு
வயறு நிறைந்தனர்
பிள்ளையின் பிள்ளைகள்
கண்ணீரின் பயனில்
பயிர் உணவாக
கண்ணீரின் குணத்தில்
வயறு நிறைத்தவன்
கண்ணீர் கொடுத்து
சாகின்றான்
அழுகையில் பிறந்து
அழுகையில் வளர்ந்தவன்
அழுகையில் அர்த்தம்
கொள்கின்றான்
அழுகையை மட்டுமே
பகிர்கின்றான்
-இப்படிக்கு முதல்பக்கம்