கிராமத்து கண்மணியே

கூற புடவை கட்டி
குங்குமம் நெற்றியில் இட்டு
வயக்காட்டின் நடுவே
வளைந்து நெளிந்து போற பெண்ணே
மாமன் இங்கு இருக்கேன்
என்ன நீயும் பார்த்துட்டு போ

உன் முகம் நான் பார்க்கையிலே
உள் மனசு கரஞ்சிருச்சி
என் பலமும் கூடிறுச்சி
இனி நான் என்னோட வேலைய
செவ்வனே செஞ்சி முடிப்பேன்
மாமன் பசியாற எதாவது செஞ்சி வா புள்ள

மதியம் வேளை வந்தது
பசியும் பறந்து வந்தது
கண்கள் உன்ன தேடுது
எங்க புள்ள நீ இருக்க
உன்னோட வருகைக்காக நான்
தனந்தனியே காத்து நிக்கேன்

தொலைவினில் உன் குரல் கேட்கையில
நானும் பசி மறந்தேன் புள்ள
வரப்பினில் நீ நடக்கையில்
உந்தன் கால் கொலுசு சத்தம்
நித்தம் என்னை சுண்டி இழுக்குது

என்னை உன் அருகே அமர்த்தி
கொண்டு வந்த பழைய சோற்றை
உன் கையாலே ஊட்டிவிட
அதை நான் அமிர்தமாய் எண்ணி
எந்தன் பசி போக்கினேன்

மாலை பொழுது வந்தது
மனசு உன்ன தேடுது
கால்கள் உன்னை நோக்கி
வெரசாக நடந்து சென்றது
வீடு வந்து சேர்ந்ததும்
உந்தன் முகம் பார்த்தேனடி
எந்தன் களைப்பு எல்லாம்
பஞ்சாகப் பறந்ததடி

மனம் மயக்கும் இரவு வந்தது
என் களைப்பை நீ போக்க
என்னை உன் மடியில் கடத்தி
என் தாயை போல தாலாட்டு பாடி
என்னை நீயும் அசதியாய் உறங்க செய்தாய்
எந்தன் அன்பு கண்மணியே !!!

எழுதியவர் : ஆரன் (3-Jun-14, 4:55 pm)
பார்வை : 1568

மேலே