இது ஒரு காதல் கதை - இரண்டாம் அத்தியாயம்

தொடர்ச்சி......


நடந்து செல்லும் நேரத்திலே, வகுப்பில் நடந்ததை அசை போட்டான், அருண்
எதற்காக தான் அந்த சிறு பெண்ணிடம் பணிந்து போனோம், அவள் ஏமாற்றியது உண்மையா? தான் ஏமாற வேண்டும் என்று, ஏமாந்தது உண்மையா? அவள் குறும்பு சிரிப்பு என்னை பணிய வைத்ததா?

மறுபடி அவள் என்னிடம் இது போல விளையாட வந்தால், நல்ல பாடம் கற்பிக்கிறேன் அவளுக்கு என்று மனதில்.

சந்தியா, தான் அப்படி வகுப்பில் பலர் முன்னிலையில் அருணை அப்படி நடத்தியது சரியா? குறும்பானவள் தான் எனினும், ஒருவரையும் தாழ்த்தியதில்லையே, இதற்க்கு முன்னால், எதனால், அவனை பார்த்ததும் அப்படி செய்ய ஒரு தூண்டுதல் வந்தது?

யோசனையில் அவளும் மூழ்கினாள், பின் வீடு சேர்ந்த பின்னே, வீட்டினரின் கல, கலப்பினால் அருணின் நினைவு மறைந்து விட்டது.

'சந்தியா, வா சீட்டாடலாம்' அக்கா அழைத்தாள்

'கொஞ்ச நேரம் கழித்து ஆடலாம், நான் கொஞ்சம் எழுத வேண்டும்'

'அடடா, என்ன இன்றைக்கு, எழுத்து, பாடம் என்று .......... மேற்கில் தானே சூரியன் மறைந்தது' குறும்பாக கேட்டாள் அக்கா சரளா

'ஏன், எப்போதும் தான் எழுதுகிறேன், என் குறுக்கெழுத்து வீட்டு பாடங்களை, இன்றைக்கு என்ன புதிதாக சொல்லுகிறாய்'

மனதிற்குள் ஒரு வேளை வகுப்பில், அருணை வீட்டு பாடம் பற்றி கேட்டு குறும்பு செய்ததினால், இன்று இப்படி அவசரமாக எழுதி முடிக்க நினைக்கிறோமா, என்ற கேள்வி எழுந்தது, சீ, சீ அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு எழுதி முடிக்க வேண்டும், சீட்டு ஆட்டத்தில் அமர்ந்து விட்டால், நேரம் போவது தெரியாமல் இருப்போம், அதனால் தான் எழுதி பின் ஆடலாம் என்று................ தனக்கே சமாதானம் கூறி கொண்டாள்

எழுதி முடித்து, பின் சில ஆட்டங்கள் ஆடி, சாப்பிட்டு தூங்க செல்லும் வரை, அன்று நடந்ததை மறந்திருந்தாள், படுக்கையில் சொகுசாக படுத்து கொண்ட பின் மறுபடி அன்றைய நிகழ்சிகள் நினைவில் வந்தது, ச்சே நான் கொஞ்சம் அதிகப்ரசங்கி தனமாக தான் நடந்து கொண்டு விட்டேன் என்று தனக்கு தானே முடிவு கூறி கொண்டாள்.

அவள் பள்ளி, பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் அவள், அவளுடைய பெற்றோர் அவளை சிறு வயதில், அப்பொழுதெல்லாம் பிறந்த தின சான்றிதழ் எல்லாம் கேட்கும் பழக்கம் இல்லாததினால், மூன்று வயது முடிந்ததுமே, முதலாம் வகுப்பில் சேர்த்து விட்டிருந்தார்கள், (அப்பொழுது சந்தியாவின் தந்தை தன் மூன்று அண்ணன், தம்பிகளுடன் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார், மக்கள் எல்லோரும் சந்தியாவிற்கு மூத்தவர்கள், பெண் மக்களெல்லாம் ஒரு பள்ளிக்கும், ஆண் மக்களெல்லாம் ஒரு பள்ளிக்கும் சென்று வந்தார்கள் கும்பலாக, பெண் மக்கள் செல்லும் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர்கள் வாழ்ந்த அதே தெருவில், இரண்டு வீடு தள்ளி வாழ்ந்து வந்தார், இவர்கள் குடும்பத்துடன் பழக்கம், அதே போல முதலாம் வகுப்பு ஆசிரியை அதே தெருவின் கடைசி வீட்டில் வசித்து வந்தார், இவர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று விளையாடுவது சந்தியாவிற்கு பழக்கம், பெரியவர்கள், சந்தியா ஒருத்தியை மட்டும் வீட்டில் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு சென்ற பின் சமாளிப்பது கஷ்டம் என்று பெண்கள் செல்லும் பள்ளிக்கு அவளின் பெரியப்பா மகளுடன் பள்ளிக்கு அனுப்பி விடுவார், அவரும் சந்தியாவை முதல் வகுப்பு ஆசிரியை ஞானாம்பிகையின் வகுப்பில் அமர்த்தி விட்டு தன ஏழாம் வகுப்பிற்கு சென்று விடுவார். விரைவில் சந்தியா மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கற்று தரும் பாடங்களை அவர்களுக்கு இணையாக படிக்க துவங்கி விட்டாள் அதனால், முதல் வகுப்பு ஆசிரியை, சந்தியாயின் பெற்றோரிடம் சந்தியாவை முதல் வகுப்பில் சேர்த்து விடுமாறு கூறினாள், அவளாகவே தகுந்த தேதியை பிறந்த தேதியாக குறிப்பிட்டு கொண்டு, சேர்த்து விட்டார் பள்ளியில், அப்படி தான் சந்தியா மூன்று வயதிலேயே முதல் படிக்க துவங்கியது, அதனால் தான் பதினைந்து வயதில் அவள் பனிரெண்டாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள்.

வகுப்பில், அவள் நெருங்கிய தோழி அமுதா, இடைவேளையில், தன குறுக்கெழுத்து வகுப்பில் நடந்ததை அவளிடம் பகிர்ந்து கொண்டாள்

'ஆனாலும், நீ ரொம்ப மோசமடி, அந்த பையனுக்கு எவ்வளவு அவமானமாக ஆகி இருக்கும், இதனால்'

'இருக்கலாம், நான் சும்மா விளையாட்டுக்கு தான் செய்தேன், சரி இன்று மாலை சந்திக்கும் பொழுது அவனிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளுகிறேன்'

எதனாலோ அன்று அவளுக்கு பள்ளியில் இருப்பு கொள்ள வில்லை, எப்பொழுது பள்ளி முடியும், வீட்டிற்கு சென்று, உடை மாற்றி குறுக்கெழுத்து வகுப்பிற்கு செல்லுவோம் என்று மனம் துடித்தது

வீட்டில், அம்மா

'சந்தியா கொஞ்சம் கடைக்கு போய் சாமான் வாங்கி குடுத்து விட்டு போ, நாளைக்கு பண்டிகை, எல்லாம் தயார் செய்து கொள்ள வேண்டும்'

'போம்மா, நீ அம்முவை அனுப்பு, எனக்கு கொஞ்சம் சீக்கிரம் போக வேண்டும் இன்று'

சொல்லி கொண்டே ஓடியே விட்டாள், தெருவிற்கு

போய் சேர்ந்த உடன் கண்கள் அருணை தேடியது

அவன் இன்னும் வந்திருக்க வில்லை, பிறகு மெதுவாக வகுப்பினில் நுழைந்தான்,

ஆசிரியர் அழைத்தார்,

'அருண், நான் சொன்ன பாடங்களை எழுதி வந்தாயா'

திருத்தி முடித்த உடன், கை நீட்டினார் புத்தகம் கேட்டு, அதில் குறிப்பிட்டு கொடுப்பார் அடுத்த நாள் என்ன பாடம் எழுத வேண்டும் என்று, அன்றும் அருண் புத்தகம் எடுத்து வரவில்லை, அவனுக்கு மறதி அதிகம்

'என்ன அருண், எப்போதும் இப்படி தான் நீ புத்தகம் கொண்டு வர மறந்து விடுகிறாய், இது சரியல்ல, கண்டிப்பாக கூறினார்'

அருணின் முகம் வாடியது, சந்தியாவிற்கு பார்க்க பாவமாக இருந்ததது

அவன் அருகே வந்ததும் தன்னுடைய புத்தகத்தை கொடுத்து, இதை கொண்டு போ அருண், என்னிடம் இன்னொன்று இருக்கிறது என்று கூறினாள்,

முதலில் மறுத்து, பின் சந்தியா வற்புறுத்தவே வாங்கி கொண்டான்

ஆசிரியரிடம் மறுபடி சென்று புத்தகத்தை, நீட்டினான்

'அட, என்னப்பா இது, புத்தகத்தை வைத்து கொண்டே, திட்டு ஏன் வாங்கினாய், சரி கொடு' என்று வாங்கி மறுநாள் எழுத வேண்டிய பாடங்களை குறித்து கொடுத்தார்

திரும்பி வரும் போது அருண் சந்தியாவின் முகத்தை நன்றியுடன் பார்த்தான்

சசி, சந்தியாவை இடித்து 'என்னடி, இது புது கதை, நேற்று கலாய்த்தாய், இன்று உன் புத்தகத்தை விட்டு கொடுக்கிறாய், என்னவோ நடக்குது இங்கே'

'அட போடி, எதுவும் இல்லை, நேற்று கொஞ்சம் அதிகமாக நடந்து விட்டேன் என்று தோன்றியது, அதனால் தான் இன்று உதவி செய்தேன்'

அது சரி, அது சரி, செய்யும்மா, நான் உன்னை வேண்டாம் என்று சொல்லவில்லை

வகுப்பு முடிந்தது, சந்தியா ஆசிரியரிடம் ஏதோ பேசி கொண்டிருந்து விட்டு கொஞ்சம் நிதானமாக வெளியே வந்தாள் சசியுடன்

அங்கே அருண் நின்றிருந்தான், அவளை பார்த்து தயக்கத்துடன், 'ஒரு நிமிஷம் என்றான்'

இவள் சசியை பார்க்க, அவளும் 'சரிடி நான் வருகிறேன், நாளைக்கு பார்ப்போம்' என்று சொல்லி சென்று விட்டாள்

'நன்றி, இந்தாருங்கள் உங்கள் புத்தகம்'

'இல்லை அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள், ஒன்று செய்யுங்கள், இங்கே உங்கள் தட்டெழுத்து பாடங்களை வைக்கும் காகித கோப்பு இருக்குமல்லவா, அதில் இந்த புத்தகத்தை வைத்து விடுங்கள், தினம் எடுத்து உபயோகபடுத்தலாம் நீங்கள், அதனால் உங்களுக்கு கொண்டு வராமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கும் கஷ்டம் இருக்காது'

'அதுவும் நல்ல யோசனை தான்' என்று சொல்லி கொண்டே அருண், தன கோப்பை திறந்து அதனுள்
இந்த புத்தகத்தை வைத்து விட்டான்.

பிறகு அங்கே நின்று கொண்டே அவர்கள் பேச துவங்கினார்கள்

'உங்கள் இல்லம் மிக அருகிலே இருக்கிறது அல்லவா, அன்று நீங்கள் உள்ளே நுழைவதை பார்த்தேன்'

'ஆம், உங்கள் வீடு எங்கே இருக்கிறது'

'என் பெற்றோர் ஊரில் இருக்கிறார்கள், நான் என் அக்காவுடன் சாந்தி நகரில் இருந்தேன், இப்பொழுது கொஞ்ச நாளாக ஒரு நண்பனுடன் அறை எடுத்து இங்கே அருகில், ஒரு தெருவில் தங்கி வருகிறேன்'

ஓஹோ! அப்படியா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்'

'இளங்கலை அறிவியல் (இரண்டாம் ஆண்டு) ரேணுகாசார்யாவில், நீங்கள் என்ன படிக்கிறீர்கள்'

'நான் பன்னிரெண்டாம் வகுப்பு, ஆர். சி. கல்லூரியில்'

பேசி கொண்டிருந்ததில் நேரம் எட்டு மணி ஆகியதை உணர்ந்த சந்தியா, ஒரு வேளை அம்மா கவலை படுவாளோ,என்ற எண்ணத்தில், சரி நான் வருகிறேன், நாளை சந்திக்கலாம் என்று சென்று விட்டாள்.....

தொடரும்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (4-Jun-14, 2:24 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 69

மேலே