அக்னிக்குஞ்சுகள் -ஈழத்திலிருந்து ஓர் ஜனனம்

கள்ளிக்கூட்டில்பால்
குடித்து வளர்ந்தோம்...
கொல்லிக்காட்டில் குடி புகுந்தோம்....
எரியும் தீயில் படுத்து உறங்கி விழித்தோம்.....
ஆவிகளின் கழுத்தை நெறித்து
பிணங்களில் அடைத்தோம்....
சிறைக்காவலன் பயந்தோட
சிதைக்குளிரிருந்து
உயிர்த்தோம்......
அக்னிச்சீற்றமே அலறி ஓட
எரித்த கருவிலிருந்து
எழுந்து முளைத்தோம்......
இருளே எமக்கு கெதியென்று
சூரியக்காரனும் சூது வைத்தான்...
சூது வைத்தயிடத்தில்சூடு வைப்போம்..,!!!!
கேடு விளைத்த மண்ணில்
எமக்கொரு கோடு வைப்போம்.....!!!!
எம் இனக்கூட்டை அழிக்க
நினைப்பவன் கருவிலே அவனுக்கொரு
காடுவைப்போம்.......!!!!!!!

ஈழத்திலிருந்து ஓர் குரல் ..

எழுதியவர் : ருத்ரா (4-Jun-14, 3:08 pm)
பார்வை : 77

மேலே