யார் குற்றம்

பள்ளிக்கூடம் நானறியேன்
பாடங்களும் படித்தறியேன்
தாய் தந்தை நானறிவேன்
ஏன் கல்விக்கூடம் நானறியேன்

கையாலாகா அப்பாவும்
வாய் பேசா அம்மாவும்
வளர்ந்த பிள்ளை வாழ வைக்க
வயிற்றுப் பசி தீர்க்கலயே

நல்ல உடை நானறியேன்
நல்லுணவும் நானறியேன்
நலங்கள் பல நானிழந்தேன்
நடைப்பிணமாய் வாழுகிறேன்

என் ஒத்த பிள்​ளையெல்லாம்
கல்விக் கூடம் செல்லல் காண
உள்ளமெல்லாம் எரிகிறது
எதிர்காலம் வெறுக்கிறது

ஆட்டிடையன் இப்போ நான்
காடும் மேடும் செல்வேன் நான்
ஐந்தறிவு ஜீவன்தான்
என் சினேகம் இப்போதான்

கையில் ஒரு கொம்புடனே
மேலுடை இல்லாமலே
கல்லும் முள்ளும் பதம் பார்க்க
உலா வாறேன் வனம் தனிலே

வனம் வாழும் ஜீவன்களும்
எனை பார்த்துச் சிரிக்கின்றன
இவன் இப்போ எம்மினம்
என்றே அவையும் நினைத்ததோ?

வீடு எனை வெறுத்தாலும்
நாடு எனை கழித்தாலும்
காடு எனை வெறுக்கவில்லை
கலங்கம் எதுவும் சொல்லவில்லை

காட்டு வாழ்க்கை மோட்டு வாழ்க்கை
என்று சொன்ன முதியோர் வாக்கை
நாடும் வீடும் வெறுத்ததனால்
காட்டை ஏற்றேன் சொர்க்கமாக

என்னை போன்ற பலர் இருக்க
சீர் திருத்தம் பல பேசி
வல்லரசு எம்மரசு எனப் பேச
வெட்கமில்லை உங்களுக்கு!!!!!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Jun-14, 8:15 am)
Tanglish : yaar kutram
பார்வை : 129

மேலே