இயற்க்கை maadhu

மழை காலத்தில்
வானை மறைக்கும்
கருமுகில் கூட்டம் உன் கூந்தல்...

இருபக்கமும் வளைந்த
நீல வானம்
உன் படர்ந்த நெற்றி

கதிரவன்
ஒரு விழி
வான் முழுமதி
மறு விழி....

செவ்வாயை செந்தூர
பொட்டாக...

குருவும் சுக்கிரனும்
இரு கரு விழிகள்

வானவில்லை
புருவம் ஆகவும்...

விண்மீன் கூட்டம்
சிந்தும் புன்னகை ஆகவும்....

இடியை பேச்சாகவும்
மின்னலை பார்வையாகவும்...

மழை நீர் நீ சிந்தும்
ஆனந்த கண்ணீர்


பறக்கும் பறவை கூட்டம்
நினைவு அலைகளாய்...

நீல நிற புடவை அணிந்து
அதில் செவ்வான
சரிகை இட்டு

நீ என்னை
நோக்குங்கால்
நான் நிலம்
நோக்கினேன்...

உன் அழகில் மயங்கி.....

எழுதியவர் : ச.கே.murugavel (5-Jun-14, 11:05 am)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 75

மேலே