தரவுகள் பிழற் ஆகுமா,, அறவுகள் தொடர் ஆகுமா ,,,
தரவுகள் பிழற் ஆகுமா,, அறவுகள் தொடர் ஆகுமா ,,,
அரூபத்தை சொற்களால் ஏவி
பேசாபனிதிணித்து
செல்லுகையின் இரவொன்றின்முதல்
சில்லிட்டுக் கொண்டிருக்கிறது
உடல்
ஆம் என்றாளோ இல்லை என்றாளோ
இரு என்றவள் பின்
தகவல் தொலைதொடர்பு
எல்லைக்கு அப்பால் சென்றுமறைந்தாள்
புருவத்தை ஒற்றிப்போகும்
தைய்யல்பிரிந்த நூலிழையொன்றை
கண்டதும் கண்கள்
ஊடகமாகிறது ,,, காட்சிகள் விரிகின்றது
அவள் காணாப்போகின்றசாலையை
கலைந்துசரிந்த
தாவணி சாலையாக்கிடும் ஒப்பனைகளின்மேலே
ஏனோ
பதிந்துசெல்ல பாதம் மறுக்கிறது
பதுங்கிக்கொள்ள ஆவல் துணிகிறது
தரவுகள் பிழற் ஆகுமா
அறவுகள் தொடர் ஆகுமா
வரவில்லாத தொங்குநிலையின்
அகவுகளாக
சிவந்து விரிந்த புலன்களினாலே
உள்ளுக்குள் நிறையச்செய்தவள்
கடிதந் தொடுக்கின்ற
அவ் விரல்நுனி சொடுக்கில்
யக்கியங்களாய்
தொடர்பகற்றிச் சாதிக்கிறாள்போல்
அவள்உய்யும்நொடியின்
மௌனம் என்பது
ம(கா)ரணபுதைகுழிதான் எனினும்
ஏனோ
பதிந்துசெல்ல பாதம் மறுக்கிறது
பதுங்கிக்கொள்ள ஆவல் துணிகிறது
தரவுகள் பிழற் ஆகுமா
அறவுகள் தொடர் ஆகுமா
தெரியவில்லை,,,,
அனுசரன்