நீ புன்னகையோடு தொடுத்த ஆயுதம் 555

பெண்ணே...

நான் உன்னை
காதலிக்கிறேன்...

என் காதலை உன்னிடம்
சொன்னேன்...

என்னை ஏற்று
கொள்வதும்...

என் காதலை ஏற்க மறுப்பதும்
உன் விருப்பமடி...

என்னை மறக்க
சொல்வது...

உன் உரிமை
இல்லையடி...

உன்னையே நினைத்து
கொண்டு இருப்பது
என் விருப்பம்...

பல நாட்கள்
தந்தாய்...

உன் மௌனத்தை
எனக்கு ஆயுதமாய்...

நீ பூக்களோடும் புன்னகையோடும்
கொடுத்த காகிதம்...

ஆயுதமென்று
உணரவில்லையடி நான்...

உன் திருமண
அழைபிதழ் கொடுத்து...

வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்...

காதலுக்கு
காகிதமும் ஆயுதம்...

உணர்ந்தேனடி உன்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Jun-14, 4:33 pm)
பார்வை : 338

மேலே