பாக்கியம் நான் செய்ய வேண்டும்மா

உயிருக்குள் உயிர் வைத்து
உறவுதனைத் தொடங்கி வைத்து
மறு பிறவி நீ எடுத்து
மகவென்னை ஈன்றெடுத்தாய்.

உதிரமதைப் பாலாக்கி
உன்னோடு நெஞ்சணைத்து
உண்ணவே புகட்டுவித்தாய்.

இமைக்குள்ளே விழியாக
கண்ணுள்ளே மணியாக
நெஞ்சுள்ளே நினைவாக

நின்னையே பிழிந்தெடுத்து
அமுது தமிழ் அணிவித்தாய்.
சறுக்கி நான் விழுகையிலும்
பிடித்து நீ நிறுத்தி வைத்தாய் .

நின் துன்பம் மறைத்து வைத்தாய்.
முகம் பார்த்தே என் கவலை
முடித்து வைத்தே நீ துயில்வாய்.

உள்ள காலம் உள்ளமட்டும்
உள்ளத்தில் தொட்டில் கட்டி
உருகிப் படிப்பாய் தாலாட்டை.

இன்னொரு பிறவி எடுத்துவந்து,
உனக்கே மகவாய்ப் பிறந்திருந்து,
பாசச் சுமைதனை சுமந்திடவே
பாக்கியம் நான் செய்ய வேண்டுமம்மா...!

எழுதியவர் : மின்கவி (6-Jun-14, 6:35 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 260

மேலே