வாழ்க காதல்

மனித இனம் தோன்றிய நாள் முதல்
காதலுக்குப் பஞ்சமில்லை.
உடல் கவர்ச்சியால் வருவது;
உள்ளத்தில் ஊறியபின் பிரிக்க முடியாதது.

வரம்பு மீறாத வரை காதல் நாகரிகமானது.
இன்றைய தெரு பூங்கா
கடற்கரை காதலில் பலவும்
அநாகரிக திரைக் காதலைப் பார்த்து
அத்துமீறி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு
பொது இடங்களில் கட்டிப்பிடித்துப் புரள்வதும்
முத்தமிட்டுக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது.

வரம்பு மீறி தவறுக்கு இணக்கமாகி
கருவுற்ற பின்பு தவிர்க்க முடியா நிலையில்
பாலியல் வன்கொடுமை என்று
பலிபோடும் சிலரும் இல்லாமல் இல்லை.

சங்க இலக்கியம் படிக்காதவர்க்கு
திரைக் காதலே பங்கமில்லாக் காதலாய்த் தெரியும்.

அரைகுறை ஆடையில் வெளிநாட்டுத் தெருக்களிலும்
களியாட்டம் ஆடி இந்தியப் பண்பாட்டை
பறைசாற்றுவதே 1960கள் முதல் இன்று வரை
கோலோச்சும் திரைக்காதல்.

வாழ்க திரைக் காதல்; கண்டு இரசித்து
குட்டிச்சுவராய்ப் போகும்
காதல் திலகங்களும் வாழ்க! வளர்க.
நாடு உருப்பட இத்தகைய காதலை
வளர்த்திடத் தானே மலிவான பொழுது போக்கிகள்

எழுதியவர் : (6-Jun-14, 8:38 pm)
Tanglish : vazhga kaadhal
பார்வை : 108

மேலே