உண்மையை சொல்லுகிறேன் உலகமயமாகிவிட்டோம்

1. காலையில் திருமணம்
களிப்பினிலே சிலநிமிடம்
மாலையில் சச்சரவு
மறுநாளே விவாகரத்து .....
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

2. அனைவருக்கும் வேலைவாய்ப்பு
ஆறுஸ்தான சம்பளமும்
ஆடையிலும் பேதமில்லை
போதையிலும் பேதமில்லை........
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

3. மாமனாரின் உயிரனுவாம்
மருமகளின் கருமுட்டை
வரைமுறையே இல்லாமல்
வாரிசுகள் பிறந்திடுமாம்
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

4. கையடக்க கணினி
காதல்சொல்லும் ரோபோ
இணையத்தில் தாய்பால்
இதயமில்லா மனிதம்......
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

5. மருத்துவ மனையினிலே
மாபெரும் தள்ளுபடி
விட்டுபோனவருக்கும்
விழாகால தள்ளுபடி.....
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

6. வாதத்திற்க்கு ஒருமருந்து
வராமல் தடுக்க மறுமருந்து
நிதம் ஒரு மருந்து
நித்திரைக்கும் ஒரு மருந்து
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

எழுதியவர் : சிவகவி (6-Jun-14, 9:25 pm)
பார்வை : 86

மேலே