எனக்காக சிலகாலம்
விண் கொண்ட தேவதையே
மண்மீது வந்தது ஏனோ........?
பிரபஞ்ச அழகை எல்லாம்
சேர்த்து வடித்த கவிதையே நீ
படைத்தவனின் பரிசளிப்பு தானோ.......?
பிரம்மை பிடித்து போனதடி
எனக்கு
பிரம்மை பிடித்து போனதடி
இத்தனிமைகள் உன் உருவத்தை
கண்ணில் பிரதிஸ்ட்டை செய்யுதடி...........
காற்றில் கலந்த உன் ஸ்பரிசத்தை
தேடி தேடி என் இரவும்
பகலும் கரையுதடி............
கண்ணோடு விளையாடும் உன்
காணல் நீர் தோற்றங்கள்
முள் ஒன்றை வைத்து
இதயத்தை கிழிக்குதடி................
ஆறுதல் தேடி பாடல் கேட்டால்
அடிக்கு அடி உன்னை நினைவூட்டுகிறது
நடந்து செல்லும் நேரம் எல்லாம்
அடுத்த அடியை கால்கள் மறக்கிறது............
நீ தொலை தூர நிலவாய் இருக்கிறாய்
தேய்வது மட்டும்
நானாக இருக்கிறேன்...............
ஐயோ இனியும் முடியாதடி
உன் நினைவுகள் இறுகி என்னை
தூக்கிலிடும் முன்
உன் மடிசாய்ந்து உறங்க
சிலகாலம் ஒதுக்கு
உன் அயல்நாட்டு பணியை
எனக்காக சிலகாலம் ஓரமாய் ஒதுக்கு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
