சிவப்பு விளக்குப் பகுதி Mano Red

சிவப்பு விளக்குப் பகுதிக்கு
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(

நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(

விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(

கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(

நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!

மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??

யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும்,
யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(

நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?

மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?

வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(

எழுதியவர் : மனோ ரெட் (8-Jun-14, 9:02 am)
பார்வை : 117

மேலே