எனக்கு வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே பாகம் - 3

மூன்றெழுத்தில் இவள் மூச்சிருக்கிறதா?
'ICU'-வில் என்ன ஆனான் இவளது தவத்திருமகன்?

(பாகங்கள் நான்கில் மூன்றாவது)
*******************

என் சாமி! நாங்க நெனச்சபடி நீ படிச்ச, மனசு குளிர்றபடி நீ வளந்த
மடமக்க எங்களோட தலைஎழுத்த மாத்த, கையெழுத்து போட வெச்ச!

நோட்டுபுக்குல புள்ளி வெச்சு, A, B, C, D,.. கோலம் போட வெச்ச
இங்க I,C,U - ன்னு எழுதுனத படிக்கிறேனே, இந்த மடச்சிக்கு இங்கிலீசு ஒரு கேடா?

உன்ன சுத்தி டாக்டருங்க நாலு பேரு, படிச்சதையெல்லாம் பேசுறாங்க,
உன்ன தொட்டுத் தொட்டு பாக்கறாங்க, நீ கொஞ்சங்கூட அசையலையே?!

"இங்கெல்லாம் அழாதமா! டாக்டர் வந்தா யேசுவாறு"-ன்னு
நாலஞ்சு தடவ, நர்ஸம்மா வந்து வந்து திட்டிட்டுப் போச்சு!
நாக்குத் தண்ணி வத்திப் போச்சு, கண்ணு நீரும் காஞ்சு போச்சு,
ஊமையா போலம்புறேனே, உன் செவிட்டுக் காதுல கேக்குதாயா?!

ஒரு பொகையில போட்டிருக்கியா, பீடி-சுருட்டு வாட பாத்திருக்கியா?
உன் வயசுக்கேத்த அவசரம் ஏதும், பாத்ததில்லையே நாங்க ரெண்டு பேரும்!

இப்படி வரமா வந்தவனே, இப்ப மரமா கெடக்குறியே!

எழுதியவர் : வைரன் (8-Jun-14, 9:54 am)
பார்வை : 674

மேலே