மலரா மரமா
நேற்றுவரை துணை இருந்தது தனிமை
இன்றென்ன தனிமையை துறத்துது புதுமை
அறிவுடனே அழிவினை அழைப்பது ஏனோ?
அழகியே அலைத்ததன் காரணம் தானோ....
தேவதைக்கு கவிதை காதலில் கொஞ்சம்
கொஞ்சும் நிலையை கற்பனை மிஞ்சும்
நஞ்சும் பஞ்சென காற்றினில் பறக்க
பகைவன் பணிந்தான் பனிதுளி சிரிப்பில்...
அழகினில் மொட்டு இதழினை தழைக்க
பனியினை தெளித்திடு என்னிதழ் பிழைக்க
தேனும் பூவும் வேறெனவே
இன்றும் நீயும் நினைக்க
மனமும் திருமணமும் ஒன்றாய் வேண்டும்
நாமும் என்றும் நிலைக்க...,
வெட்டிகிளி போல நானும் தத்தி குதிக்க
கிளியை போல நீயும் எனை கொத்தி திங்காதே
சிக்கி கிடந்த மனதை ஏனோ சிதைத்தது ஒரு சேதி
பிரிந்து போன இறகும் இன்று ஏதோ ஒரு வீதி...,
தினம் புதைந்திடும் விதை போலே
மனம் புதைப்பது நிஜம் தானே
மலர் கொடுத்தால் மணமாவோம்
மரம் கொடுத்தால் ஊஞ்சலாவோம்...