தயவு செய்து

அம்மாவின் பட்டினி ...........
அப்பாவின் தற்கொலை மிரட்டல் ..........
அமெரிக்க மாப்பிள்ளை ............
என் வேலையின்மை .............
சாதி ..........
அந்தஸ்து ........
இன்னபிற ..........

என்று
நீயடுக்கிய
காரணங்களால்
குற்றுயிருடன்
துடித்துக்கொண்டிருக்கிறேன் !
தயவு செய்து
என்னை
முற்றிலும் சாகடிக்கக்கூடிய
அந்தக்கடைசி வார்த்தைகளை
சீக்கிரம்
சொல்லிவிடேன் !

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (9-Jun-14, 10:45 am)
Tanglish : thayavu seithu
பார்வை : 159

மேலே