காதல்
இருவிழி அழுவது
உன்னை தேடி நம்
இரு உயிர் இணைவது
என்றுதான் நீ ............?
கரையிலே கரைகிறேன்
உன்னை தேடி உன்
தடைகளை தாண்டிதான்
கொஞ்ச(ம்) வா நீ ............
வானிலே மேகமாய்
வாழ்கிறாய் நீ
கலைகையில் சோகம்
தான் வாட்டுதேடி..............
கனவிலும் நினைவிலும்
கண்ணே உன்னை
கண்டுதான் கொண்டுதான்
கேட்டேன் துணை ...........
வசந்தமே வசந்தமே
மௌனம் விடு
இல்லையேல் இல்லையேல்
எடுத்ததை திருப்பிக் கொடு .........
காட்டிலே தனித்தவன்
போல வாழ்கை
பூவிழி உன்மொழி
கொஞ்சம் தா நீ ..................
ஏழை நான் ஏங்கினேன்
ஏற்றம் கொடு
தோகையே என் சிரம்
வருடி விடு .......................
எந்நாளும் உனக்காய்
வாழ்கிறேனே
எப்பவும் அதனால்
தேய்கிறேனே .............
இரவினில் உன் முகம்
மிக அருகில் நான்
தொடுகையில் போனதே
விழி மறைவில் ..............
கொடை நீ தருவாய்
கொஞ்ச நாளில்
விழி நீர் துலைப்பேன்
அந்த நாளில் ...................
என்றேனும் ஒரு நாள்
உன்னை சேர்வேன்
என்று நான் நித்தமும்
எண்ணி வாழ்வேன் ................

