புன்னகை புரிந்தால்
புன்னகை புரிந்தால்
எனது உள்ளத்தில் பெருமழை........!
மழைத்துளிகள் கேட்டது
அவள்தானே தேவதை.........!
பார்வையால் வீசினால்
காயங்களோ எனது இதயத்தில்.......!
வலிகளை உணருகிறேன்
அவள் எனது அருகில் இல்லாமல்.......!
நேர்த்தியான உறவுதான்
ஊடலுடன் சாடலுடன்.......!
நித்திரை எனக்கு இல்லை
அவள் விழித்திருக்கும் வரை......!
தேடுறேன் தொடர்ந்து எனது
இதயத்தில் அவள் இருந்தும்.......!
அனுதினம் அதிசயம்
காண்கிறேன் அவள் அருகிலே......!
உள்ளத்தை ரணமாக்கும்
எண்ணத்துடன் வந்தவளோ.......!
மனதை பறிகொடுக்க
நாடினேன் அவளை தேடினேன்........!
எனை விட்டு சென்றாலும்
எனது மனதில் வாழ்கிறாளே......!
சந்தோசத்திருநாள் இன்று
எனது காதலியின் பிறந்தநாள்.......!