மெல்லிய முத்தம்
பெண்ணே
இதழ்கள் இணைதலின்
பெயர்தான் முத்தமா !...
உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா !...
உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசிக்கிறாய்
உன் உதடுகளோடு
என் உதடுகள் ரகசியம் பேசும்போது
முத்தமிடுவதாக
தவிற்க்கிறாய் !...
இதழ்களின் ஊடுருவழில்
இன்பத்தின் பாய்ச்சலில்
ஒப்பந்தம் ஒன்றை போடுகிறாய்
இதழ்களின் இணைதல்
ஒப்பந்தம் என்றுதான் நினைத்திருந்தேன்
உன் முத்தத்திற்க்கு முன்பு வரை
தீப்பந்தம் என்று
இப்போது தானடி புரிகிறது !...
உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என் பருகுதலை
பின்வாங்க மறுக்கிறேன்
யுத்தம் காயம் தரும்
இன்றோ
உன் முதல் முத்தம்
என்னை காயப்ப்டுத்தியது
புறமுதுகு பழக்கமில்லை
உன்னோடு போடும்
முத்த போரின் போது !...
நீ
என் உதடுகளில்
போர்த்திச் சென்ற முத்த ஆடை
என் உள்ளத்து குளிரை
அள்ளிக்குடித்து
வெப்பம் ஊற்றி போகிறது !...
மூடிய இமைகள்
இன்னும் விலகவில்லை
முத்த மழை நின்று
மூச்சுக்காற்று சென்றுவிடுமென்று !...
உனக்கான முத்தங்களை
தினமும்
என் படுக்கைத் தலையணையில்
தவறாமல் இடுகிறேன்
மறவாமல் வந்து
தலையணை பொறுப்பை
ஏற்றுக்கொள்வாய் என்று !...
எதையும்
தடுமாறாமல்
தாங்கிக்கொள்ள முடியும்
உன்
மெல்லிய முத்தத்தை தவிர பெண்ணே !....