விடை கொடு, விடை கொடு எந்தன் தோழனே

விடை கொடு, விடை கொடு
எந்தன் தோழனே

விலை மதிக்க முடியாத நட்பை விலகி
செல்கின்றேனே

விளக்கங்கள் நீ கேட்க வில்லையே
இந்த விலகலுக்கு, என் ஆருயிர் நண்பனே

விதி செய்த சதியினால், இடைவெளி
ஏற்படுகிறதே,

விட்டு செல்லும் என்னை, விட முடியாமல்
ஈர்க்கின்றதே உந்தன் ஈர விழிகள்

விற்று கொண்டேனே என்னையே
அந்நிய நாட்டிற்கே

விட்டில் பூச்சி, வெளிச்சத்தை நோக்கி
செல்வது போலே, செல்கின்றேனே,
வருமானத்தை நோக்கியே

வீட்டினருக்கு பட்டு விட்டேனே,
செஞ்சோற்று கடன், தீர்த்திட வேண்டுமே
அதை, நான் சம்பாதித்தே

விருப்பத்தை மனதினில் மறைத்து
விடிவுக்கு காத்திருக்கும் இரு தமக்கைகள்

விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்று
தான் பெற்ற மகன்களை விலை பேசும்
சம்பந்திமார்கள்

விடிந்திடுமோ தன் பெண் மக்களுக்கு
என்று ஏங்கி தவிக்கும், தாய் தந்தையர்

விடியலை அனைவருக்கும் தந்திடவே
விலகி செல்கிறேன் நான் உனையே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (11-Jun-14, 2:21 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 124

மேலே