இசையோடு வாழ்க்கை

இசை இருக்குது

அம்மாவின் தாலாட்டில் இசைந்தாடும்
தூளிக் காற்றில் மயங்காத மழலை உண்டோ.

ஆலையத்தின் கூட்டில் ஆராதனை
பாட்டில் உருகாதோ மானிடநெஞ்சம்.

இலைமீது தென்றல் மோதி இளைப்பாறும்
நெஞ்சம் கோடி உறங்காதோ நிழலைத்தேடி.

ஈமத்தின் சாமத்தில், ஓலமிடும் நேரத்தில், மிரட்டாதோ உடுக்கையின் தாளம்,

உரல் மீது உலக்கை குத்தி, தொடர்ந்துவரும் மங்கையின் சுதி, ஒதுங்காதோ உரலுக்குள் உமி.

ஊடல் கொள்ளும் ஆண்மையின் வீரம்,
அலைபாயும் பெண்மையின் கானம்,
அடங்காதோ சாமத்தில் காமம்.

என்னவள் மௌனம் கொள்ள, என் இதயம் வெளியில் துள்ள, இசைக்காதோ
அவள் காதினில் மெல்ல

ஏற்றம் போடும் காளைச் சலங்கை,
இரைந்து செல்லும் வாய்க்கால் வழிச்சாலை, தலை அசைக்காதோ வளர்ந்திடும் சோலை.

ஐந்தும் இணைந்தது பைந்தமிழ் இலக்கியம், உலகின் மகிழ்ச்சியோ இயல் இசை நாடக தீபம்.

ஒன்றாய் கலந்திடும் மேகம்,
மொழிந்தாலோ இடிஎன்னும் கானம், கனிந்தாலோ மழையெனும் காமம்.

ஓயாது அலைகடல் அலை, உறவாடும்
கரையோடு தினம், களவாடும் காண்பவர் மனம்.

ஒளவையின் தேன்தமிழ் சொற்கள் முழங்காதோ இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள்.

ஒவ்வொரு உயிரிலும்,
ஒவ்வொரு விசையிலும்,
ஒவ்வொரு படைப்பிலும்.

எழுதியவர் : பிரபுமுருகன் (8-Jun-10, 12:37 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 698

மேலே