காதல் திருமணம்

அன்று என்
சகோதரனை திட்டியபோதோ
உறவினர்களை உதாசினபடுத்தியபோதோ
உன் சந்தோசத்திற்காக
உயரத்தில் இருக்கும் பூ ஒன்றை கேட்டப்போதோ
உன் பிடிவாதத்தினால் - உன்னை பார்க்க
என் வேலையை விட்டு வந்தபோதோ
எனக்கு வரவில்லை இந்த கோபம் வெறுப்பு
ஆனால் உன் எல்லா செயலும் என்னை
எரிச்சலடைய செய்கிறதே இன்று

எழுதியவர் : மாதவன் கும்பகோணம் (12-Jun-14, 8:46 pm)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 510

மேலே