பராபரமே -நாகூர் லெத்தீப்

எல்லாம் வகுத்து உலகை
பெருக்கி தொகுதியாக்கிய பராபரமே !

தத்துவம் தாங்கிய மனிதனை
படைத்து மறைந்து அருளும் பராபரமே !

உயிரை படைத்து உடலை தரித்து
உயிராய் இருக்கும் பராபரமே !

ஞான வொளியும் உண்மை
உணர்வும் தாங்கி நிற்கும் பராபரமே !

சத்தியத்தில் உதித்து மெய்
அறிவாக விளங்கிடும் பராபரமே !

தானாகி தனியாகி தீயாகி
துருவாகி அணுவாகிய பராபரமே !

மெய் ஞான மெய் அடியார்
மோனவளி கொடுத்திட்ட பராபரமே !

அருள் தேடும் அடியார்க்கு
அருவாய் நின்று அருளும் பராபரமே !

முக்தி வேண்டி நிர்ப்போர்ற்கு
முதலான மூலனே பராபரமே !

நல்லோர்ற்கு நாயகனே
தீயோர்க்கு சத்ரியனே பராபரமே !

கருணையாளனே உலகனே
தனித்தவனே உயிரே பராபரமே !

அனுதினம் அருள்பவனே
நிகரிள்ளாதவனே பராபரமே !

உலகை படைத்தவனே மனித
கருணை தரித்தவனே பராபரமே !

உலகிற்கு தலைவனே
உலகுயிர்க்கும் உயிரான பராபரமே !

பெரியோனே சிறியோர்க்கு
அருள்வோனே பராபரமே !

வல்லவனுக்கு வல்லவனே
அடியார்க்கு அடியானே பராபரமே !

உனை தேடும் உள்ளத்தில்
உதித்தவனே உண்மையான பராபரமே !

பண்பையும் அன்பையும்
நன்மையும் கொடுத்திடும் பராபரமே !

மனதில் உதித்து எண்ணத்தில்
தரித்த தாய்மையான பராபரமே !

நூரு தாய்மையின் அன்பாக
அடியேனை அருளும் பராபரமே !

நாயனே தூயவனே உலகிற்கு
உரிய தந்தையான பராபரமே !

நீயே அருளவேண்டும் எமது
வேண்டுதலே ஏற்கவேண்டும் பராபரமே !

எழுதியவர் : லெத்தீப் (13-Jun-14, 11:22 am)
பார்வை : 86

மேலே