ஊனம் உனது உடம்பிலா - நாகூர் லெத்தீப்
வறுமை
எங்கிருக்கிறது
உழைப்பை நீ
பின்தொடரும் வரை.....!
வாழ வழியில்லை
என்று சொல்வது
வேடிக்கையான
விசயம்தான்......!
தற்கொலை
உயிருக்கும் வறுமைக்கு
மருந்தாகிவிடுமா.......!
உலகம் ஒன்றும்
தலைகீழ் இல்லையே
பின்பு எதற்கு
சோதனை வேதனை..........!
நிலவில் தான்
காற்றும் இல்லை
மனிதர்கள்
வாழ வழியுமில்லை ...........!
மனிதனோ
சொல்கிறான்
வாழ வழியில்லை
இந்த பூமியிலே........!
இயற்கையோ நீ
பிறந்தாலும்
இறந்தாலும் என்றுமே
அழிவதில்லை........!
உனக்கே அழிவு
உனக்கே பிறப்பு
பிறகு வாதிடுவது
அறியாமையே.........!
கடவுளை குறை
சொல்லும்
மனிதா நீ குறைவின்றி
படைக்கப்பட்டாய்
எதற்கு.......!
ஊனமும்
முடமுமாக நீ
இருந்தால் குறை
சொல்ல முடியுமா........!
தாய் தந்தை
செய்த தவறுக்கு
இறைவன்
பொறுப்பில்லையே
பிறப்பிற்கு......!
ஊனம் உனது
உடம்பில்
இல்லை உடலால்
வளர்ந்த மனதில் தான்
இருக்கிறது.......!
நம்பிக்கை வை
துணிந்து செயல்படு
உனது துணிவை கண்டு
உலகம்
வியக்கட்டும்........!