அது அழுதுகொண்டிருந்ததுதொடர்ச்சி
அது அழுதுகொண்டிருந்தது தொடர்ச்சி...
சில ஆணிகள்
சுத்தியலுடன்
தயாராகின!
குற்றியாய்..
தன் வேர்கால்களுடன்
அது இன்னும்
அழுதுகொண்டிருந்தது!
ஒருவன் வந்தான்....
ஒருவன்
பலகையை அறுத்தான்...
இருவரும் சேர்ந்து
இணைத்துப்பிடித்து
ஆறடி நீளத்தில்
ஒரு நீள் சதுர
வடிவம் கொடுத்து
எடுத்துச்சென்றனர்
அங்கிருந்து!
அது அழுதுகொண்டே இருந்தது....
புதிய இடம்
புதிதாய் சிலர்...
அந்த பலகை கூட்டிற்கு
வெண்மெத்தை இட்டனர்.
மெழுகு பூசி
அலங்கரித்தான் ஒருவன்.
அப்போது.......
நீண்ட நாள்
வாழ்ந்த உடலை
விட்டு ஓரான்மா
விண்ணகம் சென்றது.
இங்கு சொந்தங்கள்
அழுது புரண்டன......
அந்த ஓலம்
எல்லோர் செவிகளையும்
பதம் பார்த்தது.
அப்போதும்
மிகத்தொலைவில்
அது அழுதுகொண்டுதான்
இருந்தது....!
மூச்சிரைக்க அவர்கள்
ஓடிவந்தார்கள்.
பேரம் பேசினார்கள்.
மறுவடிவம் பெற்ற மரம்
மனித உடலை சுமக்க
தயாரானது!
இரு பிணங்களையும்
பல உயிர்பிணங்கள்
சுமந்து சென்றன
இறுதியாய்....
அது ஒரு வௌி
அங்கே ஒரு வெட்டியான்
இந்த உடலங்களை
எரித்துச் சாம்பலாக்கினான்!
அவர்கள் சாம்பலை
கங்கையில் கரைத்தனர்.
இப்போது
மரமும் அழுது ஓய்ந்திருந்தது.
அதன் மொத்த அழுகையையும்
கானகம் சுமந்துகோண்டிருந்தது.
பேரமைதியுடன்.......!