தத்தளிகிறேனடி உன் நினைவில் 555

என்னவளே...
எனக்கு நிச்சயமாய்
தெரிகிறது...
இனி உன் தொடுதல்களும்
உன் முத்தங்களும்...
இனி இன்னொருவருக்கு
தான் சொந்தம் என்று…
இன்னொருவனின் சொந்தம் என்று
தெரிகிறது எனக்கு...
என் மனம் ஏற்றுகொள்ள
மறுக்குதடி...
.
உன் வியர்வை வாசம்
படிந்த கைக்குட்டை...
உன்னுடன் தொலை
தூரம் பயணம் செய்த...
பேருந்து பயண சீட்டு...
எப்போதும் சிரிக்கும்
உன் புகைப்படம்...
காதலுடன் நீ வரைந்த
காதல் ஓவியம்...
என்றும் உன்னை மட்டுமே
நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும்...
நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும்...
என்னில் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே...
என் நினைவுகளோ உன்னில்
உறக்கத்தில் வந்த கனவு போல...
விழித்ததும் கலைந்துவிட்டதடி...
நீ தந்த வலிகளுடன்
வாழவும் முடியவில்லை...
மறிக்கவும் முடியவில்லை...
தத்தளிகிறேனடி
உன் நினைவில் நான்.....