என் தந்தைக்கு வாழ்த்து

என்னை சிறு வயது முதல்
தூக்கி தாலாட்டி சீருட்டி
வளர்த்த என் தந்தைக்கு ஈடாகுமா
நான் எடுத்த இந்த ஒரு ஜென்மம்!!!

நல்லனவற்றையும் தீயனவற்றையும்
எடுத்துரைத்து என்னை நல் வழி
படுத்திய என் தந்தையே!!

நீ பட்டினி கிடந்து என் வயிற்ரை
நிரப்பி எனக்கு அன்னமிட்ட
அந்த நாளை மறக்க
முடியுமோ என் வாழ் நாளில்!!!

காட்டிலும்,மேட்டிலும் கிடந்து
நீ விரதமிருந்து என்னை மேலே
துக்கி விட்ட என் தந்தையே!!!

உன் கடனை தீர்க்க எனக்கு
இந்த ஜென்மம் மட்டும் போதாது
நான் எடுக்கும் பிறவி அனைத்திலும்
நான் உனக்கு தந்தையாக
வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்!!!

அனைவருக்கும் என் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : சோ.வடிவேல் (14-Jun-14, 11:49 pm)
பார்வை : 150

மேலே